09 February, 2011

இயற்பியல்

இயற்பியல் அல்லது பௌதீகவியல் (Physics) என்பது அறிவியலின் ஓர் அடிப்படை இயல்பாகும். இயற்பியல் உலகின் இயல்பை, இயற்கையை நோக்கிய அறிவை தேடி நிற்கின்றது. வெவ்வேறான சூழ்நிலைகளில் இயற்கையில் உள்ள பருப்பொருட்களின் பண்புகளை முறையாக அறிந்து கொள்ளுதல் எனவும் இயற்பியலை வரையறுக்கலாம்.

இயற்பியலின் பிரிவுகள்

இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:
இயற்பியல் அளவுகளும் பரிமாணங்களும்

நேரடியாகவோ பிற வழிமுறைகளின் மூலமாகவோ அளவிடப்படும் இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒரு பொருள் ஒன்றின் நீளம், அகலம், உயரம், நிறை ஆகியவை பொருத்தமான அளக்கும் கருவிகளினால் அளக்கப்படக்கூடியவை. எனவே இவை அடிப்படை அளவுகள் என அழைக்கப்படும். அப்பொருளின் பரப்பளவு, கன அளவு, அடர்த்தி போன்றவற்றை கணித்தல் சமன்பாடுகள் மூலம் பெறக்கூடியவையாகும். இவை வழி அளவுகள் எனவும் அழைக்கப்படும். அடிப்படை அளவுகள் நீளம்காலம்நிறைமின்னோட்டம்வெப்பநிலைஒளிச்செறிவுபொருளின் அளவு ஆகிய ஏழு ஆகும். வழி அளவுகள் வேகம்முடுக்கம்விசைவேலைஆற்றல்பரப்பளவு மற்றும் பல.


ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் கனவு


No comments:

Post a Comment